
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி. க.சிவசௌந்திரவல்லி இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.08.2025) தொடங்கி வைத்து, உரையாற்றினார். உடன் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.நாராயணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திருமதி.ஜெயக்குமாரி, நகர மன்ற தலைவர் திருமதி.காவியா விக்டர், நகர மன்ற துணைத்தலைவர் திருமதி.இந்திரா பெரியார்தாசன், நகரமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

