
திருப்பத்தூர் : ஆகஸ்ட் – 10திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சின்ன உடையாமுத்தூர் பகுதியில் உள்ள சென்ட் மேரிஸ் பள்ளியில் 9/08/2025 அன்று காலை 10 மணி அளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடைப்பந்து மைதானம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்ட் மேரிஸ் நிர்வாக இயக்குனர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி மற்றும் ஆடிட்டர் ரவிக்குமார் கலந்து கொண்டு கூடைப்பந்து மைதானத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். மேலும் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார்கள். உடன் செயின்ட் மேரிஸ் முதல்வர் கௌதம் ராஜா, கரஸ்பாண்டன் வினோத்குமார், கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ், இருபால் ஆசிரியர்கள், 300-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

