
ஆம்பூர்:15
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் சின்னபள்ளி குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் அவர் மீது வார்டு உறுப்பினர்கள் கேட்கும் கணக்குகளை பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் ஊராட்சி மன்ற தலைவர் நடந்து கொள்வதை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் மனு அளித்தனர். புகார் மனுவில் ஊராட்சி நிதி கையாடல் செய்தல் கடந்த ஐந்து மாதங்களாக மன்ற கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றாமல் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமலும் 4 லட்சம் ரூபாய் மேல் பணம் எடுத்திருக்கிறார். வரி வசூல் செய்த பணத்தை கையாடல் செய்துவிட்டு அதை சரி செய்ய மற்றவர்கள் பெயரில் ஒன்பதாவது அக்கவுண்டில் இருந்து பணம் எடுத்து இருக்கிறார்கள். மேலும் பல்வேறு முறைகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மீது மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

