
திருப்பத்தூரில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் தலைமை கழக பேச்சாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியில் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளரும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் மற்றும் மாநில பிரச்சார குழு செயலாளரும் தலைமை கழக பேச்சாளருமான சேலம் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் அப்போது முதலமைச்சர் செய்த சாதனைகளை குறித்து பொது மக்களிடையே எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

