க.பாலகுரு,
மாவட்ட செய்தியாளர்,
திருவாரூர் மாவட்டம்

காலநிலை மாற்றத்திற்கு மரம் நடவேண்டும். கருத்தரங்கில் வேண்டுகோள்.
திருவாரூர் பிப்,27- திருத்துறைப்பூண்டி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின சார்பில் பருவ நிலை மாற்றங்களில் மரங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மாறன் தலைமை வகித்தார் வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். முதல்வர் மாறன் பேசும் போது மரங்களின் பெயர்களையும் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றியும் மாணவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும், என்றார், சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட நகர்மன்ற தலைவர் பேசும்போது ஒவ்வொருவரும் மரம் நடுவதை கடமையாக கொள்ள வேண்டும், பருவநிலை மாற்றத்தினால் அதிக வெப்பம் நிலவுகிறது இதை தடுக்க வேண்டுமென்றால் மரம் நடுவதே தீர்வு என்றார். பாலம் செந்தில்குமார் பேசும் மரம் நடுவதை பெரிய இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் 50 மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் அலகு 1 ன் திட்ட அலுவலர் பன்னிர்செல்வம் நன்றி கூறினார். இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ன் அலுவலர் நந்தினி தொகுத்து வழங்கினார்.

