திருச்செந்தூர் வாழைப்பழம் கொடுத்த போது நேர்ந்த சோகம்,கோவில் யானை மிதித்து ஒருவர் பலி

திருச்செந்தூர் வாழைப்பழம் கொடுத்த போது நேர்ந்த சோகம்,கோவில் யானை மிதித்து ஒருவர் பலி

திருச்செந்தூர் இங்குள்ள கோவில் யானை முருக பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வந்துள்ளது. இந்த கோவில் 2006 ஆம் ஆண்டு பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.இந்த யானைக்கு தெய்வானை என பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.  இந்த யானைக்கு  26 வயதாகிறது. வளர்ச்சி அடைந்த யானை ஆகும். இந்த நிலையில் இன்று மாலை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரும் சேர்ந்து யானைக்கு உணவாக வாழைப்பழம் கொடுத்து வந்து இருக்கிறார்கள். அப்போது திடீரென மிரண்டு பிளிறிய யானை  அருகில் இருந்த பாகன் உதயகுமார் மற்றும்  அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தனது துதிக்கையால் இழுத்து கீழே தள்ளி காலால் மிதித்து உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பாகன் உதயகுமார் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சிசுபாலன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார்கள் இச்சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிருகம் எப்போதும் மிருகம் தான் என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *