திமுக தொண்டர்களுக்கு இந்தி எது இங்கிலீஷ் எது என்று தெரியவில்லை – சீமான்

திமுக தொண்டர்களுக்கு இந்தி எது இங்கிலீஷ் எது என்று தெரியவில்லை – சீமான்

வி.விஜயகுமார்
மாவட்ட செய்தியாளர்,
வேலூர் மாவட்டம்

சீமான்

மத்திய அரசு கூட்டணிக்கு இந்தி தேவையான கலைஞர் பேசிய வீடியோ ஆதாரத்தை தரட்டுமா இப்போது இந்தியை எதிர்ப்பது போல் திமுகவினர் நடித்து வருகிறார்கள்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். விஜய் கெட்டவுட் ஹேர் ஸ்டிக் போட்டதை தேவைதான். பிரசாந்த் கிஷோர் ஹிந்தி திணிப்புக்கு எதிராக கையெழுத்து இடாததை வரவேற்கிறேன் என வேலூரில் சீமான் பேட்டி.

வேலூர் மாவட்டம்
காட்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் வேலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பங்கேற்பிர்களா என கேட்டதற்கு, இவர்கள் இப்போதுதான் இதைப் பற்றி பேசுகிறார்கள் நான் 2003 ஆம் ஆண்டு இதுகுறித்து பேசிய எதிர்ப்பு தெரிவித்துவிட்டேன். தேர்தலால் இவர்கள் இதை பேசுகிறார்கள்.

கட்சிகளின் ஆட்சிகளின் கருத்தை நம்புவதில்லை.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனித்து தான் போராடுகிறோம்.

அனைத்து கட்சி கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்

இந்தி திணிப்பில் திமுக தொடர்ந்து வஞ்சகம் செய்யும் நாடகம் போடும்.
இந்தி திணிப்பில் உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன எத்தனை காலத்திற்கு இந்த நாடகத்தை நடத்துவீர்கள்.

விஜய் தொடங்கிய
GETOUT தேவை தான். ஆனால் யாரை முன் நோக்கியதை போட்டுள்ளார்கள் என தெரியவில்லை.

பல விஷயங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி வைத்திருந்து எல்லா திட்டங்களையும்
பெற்று பெயர் வைத்தது யார்.

தமிழக வெற்றி கழகத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது அது வருந்தத்தக்கது.

பிரசாந்து கிஷோரை நான் பாராட்டுகிறேன். – தமிழக வெற்றிக்கழக மேடையில் இந்திய த
தினிப்புக்கு எதிராக கையெழுத்திடாததால். அவருக்கு உள்ள மொழிபற்றை பாராட்டுகிறேன்.

தமிழ் மாரி தங்கிலிஷா உள்ளது. பிறகு இந்தி வந்தால் என்ன ஆகும். தமிழன் காசு வேண்டும் தமிழ் வேண்டாமா.

கட்சி ஆட்சி யாரையும் நம்பத் தயாராக இல்லை நானும் எனது படையும் இருக்கிறவரை இந்த இந்தி படிப்பெல்லாம் வேலைக்கு ஆகாது சாத்தியமில்லை நடக்காது* சாதாரண கூட்டம் சின்ன கூட்டம் என நினைக்காதீர்கள். பரந்தூரில் விமான நிலையத்தை கொண்டுவந்து பாருங்கள் பார்க்கலாம் சும்மா உங்களால் பேச முடியும் அவ்வளவு தான்.

தவெகா ஆண்டுவிழாவில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியதை மரியாதை செலுத்தியதை வரவேற்கிறேன் அதே சமயம் தமிழை விட்டோழியுங்கள் தமிழ் காட்டுமிராண்டி பாஷை என சொன்ன பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றுள்ளது என்ன என்று பார்ப்பது.

ஏதாவது ஒரு பக்கம் தான் இருக்க வேண்டும்.

பெரியாரால் தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆனேன் என்று சொன்னால்.
பெரியார் எத்தனை அகாடமி வைத்திருந்தார்.
பெரியாரைப் பற்றி பேசாதீர்கள் பல ஆயிரம் பெரியார்கள் இந்த மண்ணில் இறந்து இருக்கிறார்கள்.

ஒருத்தன் அப்பா, ஒருத்தர் அம்மா வந்தவன் போனவர்கள் எல்லாம் அப்பா அம்மான்னு சொல்லிக் கொண்டிருந்தால் எங்களுக்கு அப்பா அம்மா கிடையாதா?

வாக்கு விழுக்காடு உயர்வது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல ஆட்சியைப் பிடிப்பது தான் எங்கள் நோக்கம்.

எத்தனை நெருக்கடி வந்தாலும், திராவிட மாடல் அரசு மக்களை காக்கும் என முதல்வர் பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு.

என்ன நெருக்காடிகள் உங்களுக்கு யார் நெருக்கடி கொடுக்குறா, நீங்கள் தான் நெருக்கடியே.

நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் வெளியேறுவது குறித்து கேட்டதற்கு.

போனவர்கள் யாரும் முக்கிய பிரமுகர்கள் இல்லை. வெளியேறுவது குறித்து நான் பேசவில்லை அதனால் வரவேற்கிறேன்.

தமிழகத்தின் எதிர்காலம் விஜய் தான் என அதை கூறியது குறித்தது கேட்டதற்கு

ஒரு தம்பி இன்னொரு தம்பியை பற்றி பேசுகிறார். அவர்கள் கட்சியில் உள்ளவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என கூறினார்.

சமூக வலைதளங்களில் இந்தி ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே நாடாளுமன்றத்தில் காலத்தை தள்ள முடியும் இல்லையென்றால் அண்ணாந்து தான் பார்த்துக் கொண்டு அமர வேண்டும் என துரைமுருகன் பேசிய வீடியோ வைரலானது குறித்து செய்தியாளர்கள்

அய்யா துரைமுருகன் பேசியது தான் திமுகவின் நிலைப்பாடு இப்பொழுது இந்தி எதிர்ப்பேன் என்று சொல்வது நாடகம் முரசொலி மாறன் இறந்த பிறகு கட்சியில் அவரது மகன் தயாநிதிமாறனுக்கு கட்சியில் இடமளிக்கிறார்கள் மூத்தவர்கள் கட்சியில் இருக்கும் பொழுது இளையவருக்கு எப்படி பதவி கொடுக்கிறீர்கள் என செய்தியாளர்கள் அப்பொழுதே கேட்டதற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறிய பதில் தயாநிதிக்கு இந்தி நன்றாக தெரியும் , வட இந்திய தலைவர்களோடு பேச வசதியாக இருக்கும் அந்த வீடியோ ஆதாரத்தை நான் அனுப்பட்டுமா இது நடிப்பு நாடகம் இந்தி என்று தான் திணிக்கிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டுள்ளீர்களா எந்த இடத்தில் இந்தி இல்லை உங்கள் கட்சியினருக்கு இந்தி எது ஆங்கிலம் எது என்றே தெரியவில்லை போர்டில் உள்ள ஆங்கிலத்தை அழித்துவிட்டு வருகின்றனர் எத்தனை காலத்திற்குத்தான் அடுத்தவர்களை நம்புவீர்கள் என்று தான் உங்களை நீங்கள் நம்புவீர்கள் இவர்களை நம்பி நம்பி நாம் நடுத்தெருவில் தான் நின்று கொண்டிருக்கிறோம் 65 ஆண்டுகளுக்கு முன்னரும் இப்படிதான் போராடினோம் இப்பொழுதும் இதை வைத்தே போராடுகிறோம்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *