
திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கம் இணைந்து கர்ம வீரர் காமராஜர் 123- வது பிறந்தநாளை
கல்வி வளர்ச்சி நாள் விழாவாக நிகழ்ச்சி திண்டுக்கல்
மாவட்ட மைய நூலகத்தில் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல்
மாவட்ட நூலக அலுவலர் இரா.சரவணக்குமார் தலைமை தாங்கினார்.
திண்டுக்கல்
மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் நல்லாசிரியர் இ.இலாசர் வேளாங்கண்ணி ,
தமிழ்நாடு, பாண்டிச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் Ln.MJF.A. சௌந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
திண்டுக்கல்
வாசகர் வட்ட மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகரும், செயலருமான
ஆ.சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார்.
வாசகர் வட்டத்தின் பொருளாளர் Rtn.அனந்தராமன்,
பட்டிமன்ற நடுவர்கள்
திண்டுக்கல் சுரதா, கவிஞர் .பெ.கோவிந்தராசு, எம்.எஸ்.பி. பள்ளி நல்லாசிரியர் ச.ஜெயராமன்,
,காந்தி மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜெயசீலன்,சிறார் எழுத்தாளர் ஏ.ஆர்.முருகேசன், தன்னம்பிக்கைப் பேச்சாளர் தங்கவேலு மாரிமுத்து,பொறுப்பாளர் பி.மீராபாய், இலக்கியக் களம்,காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்
முனைவர். பா.பிரபாவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியின் போது
6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு , இதில் வெற்றி பெற்றவர்களுக்கு
திண்டுக்கல் 2-ஆம் நிலை நூலகர் மெட்ரோ லயன்ஸ் சங்கம் Ln.த.சுகுமார், திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கம் Ln.R.சௌந்தரராஜன்,திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கம்
ஆசிரியர் Ln.S.சகாயசெல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
மாவட்ட நூலக அலுவலர், மவாட்ட நூலகப் பணியாளர்கள், வாசகர் வட்டம்,திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம், திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் வாசகர் வட்டம் பொன்.சுப்பிரமணி நன்றியுரை கூறினார்.