
திருப்பத்தூர் – ஜூலை 30
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து துறை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்பொழுது அவர் பேசுகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் அப்படி தலைக்கவசம் அணிந்து செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டாலும் உங்கள் தலை விதியை மாற்ற முடியும், மேலும் கார்களில் செல்லும் பொழுது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், சாலையைக் கடக்கும் பொழுது போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடித்து சாலையை கடக்க வேண்டும் என பேசினார். இந்தக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், ரெட் கிராஸ் அமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.