
குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது பழமை வாய்ந்த கடைகளை இடித்து நவீன முறையில் புதிதாக கடைகள் கட்டுவதற்கும் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 41.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான டெண்டரும் விடப்பட்டதை தொடர்ந்து கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு பூமி பூஜையும் போடப்பட்டது.
நகராட்சியில் இந்த நகராட்சியின் இந்த நடவடிக்கையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி வியாபாரிகள் சார்பில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டத்துடன் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் மேலும் மாற்று ஏற்பாட்டாக உழவர் சந்தை பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது தற்காலிக கடைகளில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரி 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர்.
இது குறித்து ஆணையாளர் இளம் பரிதி கூறுகையில் : மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் பணி காரணமாக மாற்று ஏற்பாடாக உழவர் சந்தை பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்கெட் வியாபாரிகள் 25க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அங்கு கடை ஒதுக்கீடு செய்யுமாறு மனு கொடுத்துள்ளனர். முன்கூட்டியே வரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தற்காலிக கடை மட்டுமில்லாமல் நிரந்தர கடையும் ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.