
மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவேற்ற கோரி, மின்சார வாரியத்தின் சி ஐ டி யு தொழிற்சங்கத்தின் ஒரு அங்கமான தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் நேற்று ஒரு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வாயிலில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர். திட்ட தலைவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மின்வாரியத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்திட வேண்டும், தினக்கூலி அடிப்படையில் சம்பளம் பெறுபவருக்கு அடையாளம் கண்டு நிரந்தர பணி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . சி ஐ டி யு தொழிற்சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து பேசினர்.