தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மு.மணிமாறன் ஏற்பாட்டில் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பாக கொண்டாடினர்,

திருப்பரங்குன்றம் பதினாறு கால் மன்றம் முன்பு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் ஏற்பாட்டில் மண்டல தலைவர் சுவிதா விமல், பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்டச் செயலாளர் எம் ஆர் பி ஆறுமுகம் ஆகியோர் காலை உணவை சுமார் 500 பேருக்கு வழங்கினார்கள், இதேபோல 97 வட்டக் கழக சார்பில் கோட்டை தெரு பகுதியில் வட்ட செயலாளர் எஸ் கே வி எஸ் சிவா தலைமையில் இனிப்புகளை பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், மண்டல தலைவர் சுவிதா விமல், கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
மேலும் 93 வது வட்ட சார்பில் பசுமலை தியாகராஜர் காலனி பகுதியில் மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் எம் பி ஆர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் வட்ட செயலாளர் பசுமலை ஜெயராமன் ஆகியோர் பொதுமக்களுக்கு காலை உணவை வழங்கினார்கள், இதைத்தொடர்ந்து தெற்கு பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமையில் திருநகர் ஹார்விப்பட்டி பாலாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கேக்கு வெட்டியும் சிறப்பாக கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் கீழக்குயில்குடி வி.ஆர்.செல்வந்திரன், வழக்கறிஞர் சிவராஜா, வட்டச் செயலாளர்கள் சாமிவேல், இளங்கோ, பரமேஷ்பாபு, எல் ஐ சி மாரியப்பன், அன்பு, இளந்தென்றல், சுதாகரன், சிவலிங்கம், முத்துப்பாண்டி, முருகன், பாபுஜி, சுந்தர், இளைஞர் அணிசாரதி ,கார்த்தி, கைவிஷ் கார்த்தி, மாணவரணி மருது, உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.