தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
டிசம்பர் 9ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் நடைபெறும்

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9-ஆம் தேதி துவங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களுடன் பேசிய அவர், “தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தொடங்கப்படும். பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது பற்றி அலுவல் ஆய்வு குழு முடிவெடுக்கும்” என்று கூறினார்.

அவர் மேலும், “அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், எத்தனை நாட்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். நான் விரும்பினாலும் 100 நாட்கள் கூட்டம் நடத்துவேன் என்று சொல்ல முடியாது. அந்த குழுவில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் இருக்கின்றனர்,” என்றார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *