தமிழக கடற்கரையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழக கடற்கரையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது,
மேலும் வடதமிழக கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என்றும்,
நாளை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்தள்ளது.