செய்தி முன்னோட்டம்
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு திருமண விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
நடிகர் ரஜினி மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யாவை, 2004ல் நடிகர் தனுஷ் காதலித்து மணந்தார். இவர்களுக்கு, லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த 2022ல் தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரலில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
கடந்த 21ம் தேதி இறுதி விசாரணைக்கு ஆஜரான தனுஷ், ஐஸ்வர்யா, நீதிபதி முன் தங்கள் முடிவில் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று இறுதி தீர்ப்பை அறிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்