செய்தி முன்னோட்டம்
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறையாவது துவைக்கப்படும் என்றும், படுக்கை உறை கிட்டில் கூடுதல் பெட்ஷீட் வழங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி குல்தீப் இந்தோரா,”பயணிகள் அடிப்படை சுகாதாரத் தரங்களைச் சந்திக்கும் வகையில் படுக்கை, கம்பளி போர்வைகள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுமா?” எனக்கேட்கப்பட்டது.
இதற்கான எழுத்துப்பூர்வ பதிலில், அமைச்சர், “தற்போதைய விவரக்குறிப்புகளின்படி, இந்திய ரயில்வேயில் பயன்படுத்தப்படும் போர்வைகள் இலகுவானவை, துவைக்க எளிதானவை மற்றும் ஒட்டுமொத்த வசதியான பயண அனுபவத்திற்காக பயணிகளுக்கு நல்ல காப்பு வழங்குகின்றன.”
மேலும் அவர் கம்பிளிகள் மாதம் ஒரு முறை துவைக்கப்படும் என்பதையும் கூறினார்.
பெட்-ரோல்
படுக்கை விரிப்புகளின் சுத்தம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக அமைச்சர் வலியுறுத்தல்
பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் (Bed roll) பாதுகாப்பு மற்றும் சுத்தத்தினை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
அதில், பயணிகளின் சௌகரியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில், சிறந்த தரத்தை உறுதி செய்வதற்காக மேம்படுத்தப்பட்ட BIS விவரக்குறிப்புகளுடன் கூடிய புதிய லினன் செட் கொள்முதல், சுகாதாரமான படுக்கை விரிப்புகளை வழங்குவதை உறுதிசெய்ய இயந்திரமயமாக்கப்பட்ட சலவைகள், தரமான இயந்திரங்கள் மற்றும் படுக்கை விரிப்புகளை துவைக்க குறிப்பிட்ட ரசாயனங்கள் பயன்படுத்துதல் மற்றும் போர்வைகள் சலவை நடவடிக்கைகளை கண்காணித்தல், துவைக்கப்படும் படுக்கை விரிப்பு மற்றும் போர்வையின் தரத்தை சரிபார்க்க வைட்டோ-மீட்டர்கள் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
இணையத்தளம்
படுக்கை விரிப்புகள் குறித்த புகார்களுக்காக தனி இணையதளம்
படுக்கை விரிப்புகளை பற்றி ரயில்மடாட் போர்ட்டலில் பதிவு செய்யப்படும் புகார்கள், விரிப்புகள்/படுக்கை தொடர்பான புகார்கள் உள்ளிட்டவைகளை கண்காணிக்க/உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டல தலைமையகம் மற்றும் கோட்ட அளவில் போர் அறைகள் நிறுவப்பட்டுள்ளன என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பெட்-ரோல் பேக்கேஜிங் தவிர, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் லினன் / பெட்-ரோல்களை சேமித்து வைக்கவும், போக்குவரத்து செய்யவும், ஏற்றவும் மற்றும் இறக்கவும் மேம்படுத்தப்பட்ட தளவாடங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் மேலும் கூறினார்.