
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தெ.கள்ளிபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஞானம் மழலையர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி மாணாக்கர்களின் அறிவியல் சார்ந்த படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.
தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் ஷண்முகவேல் மற்றும் தென்கரை பேரூராட்சி 2வது வார்டு கவுன்சிலர் மு.தேவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
பள்ளி மாணாக்கர்கள் தங்களது படைப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் பள்ளி தாளாளர், புஷ்பராஜ்,
பள்ளி தலைமை ஆசிரியர் மரிய ஜின்ஸி , உதவி தலைமை ஆசிரியர் நாகம்மாள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.