
ஜோலார்பேட்டை : ஜூன் – 1
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை 9.30 மணியளவில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் நிகழ்வினை துவக்கி வைத்தார், மேலும் இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை காலணிகள் என சுமார் 450-மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரிவல்லி தலைமையில், முன்னிலை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் மற்றும் நகர மன்ற தலைவர் காவியா விக்டர், நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியதாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, பள்ளி தலைமை ஆசிரியர் முனியப்பன், திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம், வார்டு உறுப்பினர் சுமதி, பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத் தலைவர் மகேந்திரன், பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள், அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.