
ஜோலார்பேட்டை:30
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் நாட்றம்பள்ளி தாலுக்கா கேத்தாண்டபட்டி ஊராட்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணி அளவில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருப்பதி, ஜெயலட்சுமி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ் கலந்து கொண்டு முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர்கள்.
உடன் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் காஞ்சனா ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் (கிராம) வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தீபா சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்கள்.
உடன் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு உறுப்பினர் எழிலரசி குமார் துணைத் தலைவர்கள் ஊ.க. முருகன், ஜெயந்தி பெருமாள் ஊராட்சி செயலாளர்கள் மேகநாதன், அனிதா பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

