ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில்
ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறை மீண்டும் வழங்க கோருதல் ஒப்பந்த ஊதியம் மதிப்பூதியம் தினக்கூலி முறையினை இரத்து செய்து அனைவருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட கோருதல் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 25.02.2025 காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டி.டி.ஜோஷி, ஆ.ஜோசப்அன்னையா, எம்.ஜெயகாந்தன், ஜி.சீனிவாசன், சகேயு சத்யகுமார் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர்.
மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் உருதுவழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ் வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் அக்ரி.இ.ராமன் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கனினி ஆசிரியர் சங்க மாவட்ட மாநில செயலாளர் ஜி.கோபி, ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் எ.டி.அல்போன்ஸ்கிரி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் பெ.இளங்கோ மாவட்ட செயலாளர் க.குணசேகரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கிளை தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் ஆர்பாட்ட பேருரையாற்றினர்.
நிறைவேற்று நிறைவேற்று தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்று, மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்து, சரண் விடுப்பு முறை மீண்டும் நடைமுறைபடுத்து. சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்த ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி முறையினை இரத்து செய்து அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்கிடுக ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் 10 அம்ச கோரிக்கைகளை உடனடியான நிறைவேற்று என்ற கோஷங்களை எழுப்பினர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *