“ஜாக்டோ ஜியோ கண்டனா ஆர்ப்பாட்டம்…”

“ஜாக்டோ ஜியோ கண்டனா ஆர்ப்பாட்டம்…”

க.பாலகுரு,
மாவட்ட செய்தியாளர்,
திருவாரூர் மாவட்டம்.

“ஜாக்டோ ஜியோ கண்டனா ஆர்ப்பாட்டம்…” ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு…

திருவாரூர் பிப் ,27-திருவாரூரில் தமிழக அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

பொறுப்பாளர்கள் சண்முக வடிவேலு, சுதாகர், மணிமாறன், பூபதி, முத்துவேல், ராமலிங்கம் உள்ளிட்டோர் தலைமை ஏற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்.. 2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.... காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை ஒப்படைக்க வேண்டும்...,

இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இணையான ஊதியம் வழங்க வேண்டும்..., ஆசிரியர் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும்... உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசுடன் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவ்வமைப்பு அறிவித்தது.

அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும்.. ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் சண்முகம், ஜவகர், பெ.இரா.ரவி, மற்றும் பிரகாஷ், துரைராஜ், செங்குட்டுவன்,ராஜாராமன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *