சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதி கனமழைக்கானை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதி கன மழை காண ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஈரோடு கோவை திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.