செய்தி முன்னோட்டம்
நடிகர் நாகர்ஜூனாவின் வீட்டில் மற்றுமொரு மகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது. நாகார்ஜூனா- அமலா தம்பதியினரின் மகனான நடிகர் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது.
நடிகர் அகில், ‘சுட்டி குழந்தை’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர். அவர் தற்போது தெலுங்கு படவுலகில் வளர்ந்து வரும் நடிகராவார்.
அவருக்கும், அவருடைய நீண்ட நாள் காதலியான ஜைனப் என்பவருக்கும் நேற்று இருவீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த ஜோடி கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகை அமலாவும், நாகர்ஜூனாவும் தங்கள் சமூக வலைத்தளத்தில் அறிக்கை மூலம் ரசிகர்களுக்கு பகிர்ந்துகொண்டனர்.
விவரங்கள்
யார் அந்த ஜைனப்?
ஜைனப் ராவ்ட்ஜி, தெலங்கானாவின் தொழில் அதிபர் சுல்பி ராவ்ஜியின் மகள் ஆவார். அவர் கட்டுமானத் துறையில் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜைனப் ராவ்ட்ஜி, சிறு வயது முதல் இந்தியா, துபாய் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளுக்கு இடையே தனது வாழ்க்கையைக் கழித்ததாகவும், அவர் ஒரு திறமையான ஓவியர் எனவும் கூறப்படுகிறது.
மேலும் அவரது படைப்புகள் ஹைதராபாத் உட்பட பல கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன.
இவரும், நடிகர் அகிலும் சிறு வயது முதல் நண்பர்கள் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யா- ஷோபிதா திருமண நிகழ்வுகளை ஒட்டியே இவர்களின் திருமண நிகழ்வும் நடைபெற வேண்டும் என அவர்கள் விரும்பியதால் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ட்விட்டர் அஞ்சல்


