
திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபன்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண் தலைமையில் கலந்து கொண்டு பேசினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆணையம் குழு செயலர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட கோட்டாட்சியர், திட்ட இயக்குனர், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு சிறுபான்மையினர் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

