
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தேசிய விருத்தாளர் சமூக சேவகர் மணிமாறனுக்கு எளிமையான முறையில் அரசு பதிவு திருமணம் அருள்மிகு செல்வ விநாயகர் கோவிலில் எளிமையான முறையில் தாய் தந்தை குலதெய்வம் குரு அருளால் நடந்தது
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம் பள்ளம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரெங்கன் என்பவர் மகன் மணிமாறன் (வயது37) இவர் தனது 16- வயது முதல் இந்தியா முழுவதும் கடந்த 23 ஆண்டுகள் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.அவர் திருமணம் செய்தால் சமூக சேவையில் ஈடுபட தடை ஏற்படும் என்று கருதி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.அதே நேரத்தில் சமூக சேவையில் ஆர்வம் கொண்ட பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்று பெற்றோருக்கு தந்தைக்கு உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் மணிமாறன் தந்தை பாண்டுரெங்கன் இயற்கை எய்தினார்.அவரது அஸ்தியை வைத்து சொந்த கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ பாண்டுரங்கேஸ்வரர் ஆன்மா சிவாலயம் அமைத்து மணிமாறன் வழிபாடு செய்து வருகிறார்.
தந்தைக்கு கோவில் கட்டிய மகன் தந்தைக்கு அளித்த சத்தியவாக்கு ஆத்மா சந்தோஷம் சமாதானத்துக்காக எளிமையான முறையில் அரசு பதிவு திருமணம் செய்து கொண்டார்

இதற்கிடையில் மணிமாறன் சமூக சேவைப் பற்றி அறிந்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பூர்ணிமா (25) என்பவர் மணிமாறனை சந்தித்தார்.அவர்கள் கருத்து ஒன்று போல் இருந்ததால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணத்துக்கு மணிமாறன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த போதிலும் மணமகள் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தன்னை விரும்பும் பெண்ணை கைவிட விரும்பாத மணிமாறன் பூர்ணிமாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர்கள் திருமணம் கோவிலில் இன்று நடைபெற்றது.
பின்னர் அவர்கள் கடலூர் சென்று தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். இது பற்றி தகவல் வெளியானதும் சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் சமூக ஆர்வலர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த திருமணம் குறித்து பூர்ணிமா கூறும் போது நான் மணிமாறனின் சமூக சேவைகள் பற்றி அறிந்ததும் அவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அதற்கு எங்கள் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் அருள்மிகு செல்வ விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம் எங்களுக்கு காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு கூறினார். இந்த பேட்டியின் போது மணிமாறன் தரப்பு வழக்கறிஞர் உடன் இருந்தனர்.