
சங்கரன்கோவில்
ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா
சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வீரகொடி வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அன்னை ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் கொடை விழா நடைபெற்றது.
கொடை விழாவை பால் குடங்கள் வீதி உலா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சர்ப்ப சித்தி விநாயகர், ஸ்ரீ சித்தர் பீடம் திருக்கோவிலில் இருந்து தொடங்கிய பால்குடங்கள் வீதி உலா நான்கு ரதவீதி வழியாக கோவிலை சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதணைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சக்தி கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கௌரவ ஆலோசகர்கள் நாராயண பிள்ளை, முத்தையா பிள்ளை, சமுதாய தலைவர் மாரியப்பன், துணைத் தலைவர் முருகேசன், செயலாளர் ஆர்.சி மாரியப்பன், பொருளாளர் வீரபாண்டியன், இணை செயலாளர் சந்தன மாரியப்பன் மற்றும் விழா கமிட்டியினர், சமுதாய நிர்வாகிகள், வ.உ.சி இளைஞர் அணியினர், வ.உ.சி சுதேசி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.