
சங்கரன்கோவில், பிப். 28
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதை விழிப்புணர்வு மற்றும் பெண் குழந்தைகள் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா துவக்கி வைத்தார்.
பேரணியில் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் பெண் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி வந்தனர். பேரணி ராஜபாளையம் சாலை, திருவேங்கடம் சாலை வழியாக வந்து திருவேங்கடம் சாலையில் உள்ள ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. தொடர்ந்து ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.
பேரணியில் சாரண சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் மூக்கையா, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனி செல்வம், சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் சுப்பிரமணியன், சீனிப்பாண்டி, சிவசுப்பிரமணியன், வேணு கோபாலகிருஷ்ணன், டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பிரபா மற்றும் சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில் 36 கிராம சேனை தலைவர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.என்.ஆர் மேல்நிலைப்பள்ளி, செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி, சோலைசேரி ஜோதி மேல்நிலைப்பள்ளி, தென்மலை அரசு மேல்நிலைப்பள்ளி, கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலமநாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த சாரண,சாரணிய மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

