
சங்கரன்கோவில், பிப். 27
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என் ஜி ஓ காலனியில் இயங்கி வரும் ஜி.வி எலும்பு மற்றும் கண் மருத்துவமனை சார்பில் சங்கரன்கோவிலில் உள்ள விண்மீன் இல்ல மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.
கண் மருத்துவர் பூர்ணிமா பாலவிக்னேஷ் முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பார்வை திறன் மற்றும்
கண்ணில் ஏற்படக்கூடிய கண்புரை,கண் எரிச்சல்,கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான சிகிச்சை அளித்து தகுந்த நபர்களுக்கு கண் கண்ணாடி வழங்குவதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் பாலவிக்னேஷ், மருத்துவமனை மேலாளர் கார்த்திக் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

