திமுக மதுரை வடக்கு மாவட்டம் மதுரை மேற்கு தொகுதி விளாங்குடி கலைஞர் திடலில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், உரையாற்றிய தகவல் தொழில் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,

இந்த அமைப்பு மாற்றம் ஏற்பாடு எதற்காக எத்தகைய சூழ்நிலையில் நடந்திருக்கிறது அமைச்சர் மூர்த்தி அவர்களுக்கு தரப்பட்டிருக்கிற பொறுப்பு என்னவென்று நான் பல இடங்களில் கூறியிருக்கிறேன் ஒரு கட்சியை நடத்துவதற்கு அடிப்படை திராவிட இயக்க தத்துவத்தின் இன்றைக்கு செயல்பாடாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை நடத்துவதற்கு முன்பு முதலமைச்சர் தலைவர் அவர்கள் பல்வேறு திறமை வாய்ந்த பல்வேறு பொறுப்புகளை வெவ்வேறு நபர்களுக்கு வழங்குவார் சிலருக்கு திரளாக கூட்டம் கூட்டிய ஏற்பாடு சிறந்திருக்கும் சிலருக்கு ஊடகத்தில் சிறப்பாக பேச பெருமை இருக்கும் சிலருக்கு சிறப்பாக நிர்வாகம் செய்யத் திறமை இருக்கும் சிலர் விளம்பரத்தில் சிறப்பாக இருப்பார்கள் ஆனால் ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு தத்துவ இயக்கத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கிய விளக்கம் அதை செயல்படுத்தும் திறமையும் தேர்தலில் வெற்றி பெறுவது தான். ஏனென்றால் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் ஆட்சியை அமைக்க முடியாது கொள்கை அடிப்படையில் எந்த நிதி ஒதுக்கி சட்டம் உருவாக்கி சமுதாயத்தின் மாற்றத்தை கொண்டுவர முடியாது அந்த அடிப்படையில் பார்த்தால் இறுதியில் சுமார் 20 ஆண்டுகள் வரலாற்றில் மதுரை மாவட்டத்தில் திமுக அந்த அளவுக்கு பெரிய வெற்றி பெற்றதில்லை இருக்கிற 10 தொகுதியில் குறிப்பாக 2016 தேர்தலில் 10 தொகுதிகளில் வெறும் இரண்டு தொகுதிகள் தான் வெற்றி பெற்றோம் 2021 தேர்தலில் பத்தில் ஐந்து தொகுதிகள் வெற்றி பெற்றோம் மாநில சராசரி பார்த்தால் இது குறைவாக தான் இருக்கிறது அதேபோல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும்போது பல தொகுதிகளில் நூறு சதவீதம் வெற்றி பெற்ற சூழ்நிலையில் மேற்கு தொகுதியில் சுமார் 28 30 சதவீதம் மாமன்ற உறுப்பினர் பொறுப்புகளில் வெற்றி பெறவில்லை எனவே இந்த கூட்டம் சிறப்பாக அமைந்திருக்கு நல்ல ஆரம்பம் என்று நான் கூறினாலும் மூன்று முறை தொடர்ந்து இந்த தொகுதியில் மாற்று கட்சி வெற்றி பெற்ற சூழ்நிலையில் நமக்கெல்லாம் உழைப்புக்கு இது ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன் எந்த தொகுதியிலும் தொடர்ந்து மூணு நாள் முதல் தோல்வி அடைந்த பிறகு மாற்றத்தை உருவாக்குவது கூடுதல் கடினமாக இருக்கும் எனினும் அமைச்சர் மூர்த்தி திறமை வாய்ந்தவர் எனவே இந்த இலக்கை இந்த முறை உறுதியாக அடைவோம் என்று கருதி நீங்கள் எல்லாரும் வேறுபாடு விட்டுவிட்டு ஒற்றுமையாக செயல்பட்டு ஏனென்றால் எனக்கு அனுபவம் இங்கே எல்லாம் கழகத்தில் எல்லோரும் ஒற்றுமையோடு செயல்படுகிறோமோ அங்கே எல்லாம் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது என்று தான் என்னுடைய அனுபவம் . திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியை திட்டம் வகுத்து உருவாக்கி அதன் தலைமை பொறுப்பேற்று நடத்திய எனக்கு 234 தொகுதி தகவலும் ஓரளவுக்கு இன்னும் மனதில் இருக்கிறது. ஆச்சரியப்பட தக்க அளவு என்று இல்லாமல் அனைவரும் நல்ல முயற்சி எடுத்து இந்த வெற்றியை உறுதி செய்வோம் என்றார்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைச்சர் மூர்த்தி
20 ஆண்டுகாலத்திற்கு மேலாக நான் இந்த தொகுதியை வெற்றி பெறவில்லை என்றும் அதே நேரத்தில் உள்ளாட்சி 30% குறைவாகவும் பெற்றிருக்கிறோம் என்று சொன்னார்கள் இதற்கு பின்னால் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிகம் பெற்றிருந்தாலும் நிச்சயமாக இந்த இருக்கக்கூடிய இந்த மேற்கு தொகுதியில் கூட்டம் அதுவும் மேற்கு தொகுதியில் இருக்கிறவர்களுக்கு மட்டும் இந்த பொது உறுப்பினர் கூட்டத்தை கூட்டுகின்றோம் இந்த கூட்டத்தில் பொது உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற அமைச்சர் சொன்னதை போல ஒரு மிகப்பெரிய கூட்டு முயற்சி வேண்டும் 2021 50% வெற்றி பெற்று இருக்கிறோம் இந்த கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று நினைத்தோமோ இன்றைக்கு நிச்சயமாக அதனை நடத்தி காண்பித்து இருக்கிறீர்கள் எங்களுடைய இலக்கு மதுரை மாவட்டத்தினுடைய இன்றைக்கு தென் மாவட்டத்திலே மதுரை மாவட்டம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் எங்களை பொறுத்தவரை நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 10 தொகுதியை வெற்றி பெற்று அதிலேயே மேற்கு தொகுதியில் அதிக வாக்குகளை பெற்ற தொகுதியாக நாம் எல்லோரும் சேர்ந்து உருவாக்குவோம் என்று எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது இன்றைக்கு பொது உறுப்பினர் கூட்டம் ஒரு மண்டலத்தில் நடத்துவோம் அதுலயும் மாவட்ட கழக கூட்டமாக நடத்துவோம் ஒரு கூட்டமாக நடத்தி இருக்கிறோம் மிகப்பெரிய அளவில இருக்கிறோம் நீங்கள் எல்லாம் முழு ஒத்துழைப்போடு இன்னைக்கு உறுப்பினர்களையும் மதித்து முன்னாள் பொறுப்பாளர்களாக வட்ட செயலாளர் இருந்தாலும் அவர்களையும் அழைத்து இன்றைக்கு இந்த கூட்டத்தை நாம் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் இந்த பணி மேலும் தொடரும் அதற்கு முன்னோடியாகத்தான் வரக்கூடிய 28ஆம் தேதி இந்த மேற்கு தொகுதியினுடைய என்னென்ன அடிப்படை தேவைகள் செய்ய வேண்டும் 22 வார்டுகள் இருக்கிறது ஒரு பேரூராட்சி இருக்கிறது ஏழு பஞ்சாயத்து இருக்கிறது அதற்கான பணிகளை செய்வதற்கான ஆய்வு கூட்டத்தை 28ஆம் தேதி எம் எஸ் மகாலில் நடத்த இருக்கிறோம் நம்முடைய மாநகராட்சியாக இருந்தாலும் மாவட்டமாக இருந்தாலும் அவர்களுடைய பரிந்துரைகளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுநிச்சயமாக அந்த பணிகளை செய்வதற்கு முன்னாடி தொண்டனாக உங்களோடு கலந்து அந்த பணியை செய்வதற்கு இருப்பேன் என்று இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன் நிச்சயமாக எது எப்படியாக இருந்தாலும் இன்றைக்கு நாங்கள் இருக்கக்கூடிய இந்த 10 தொகுதிகளையும் வெற்றி பெறுவதற்கான பணியை தாங்கள் துவக்கி இருக்கிறோம் என்றார்.

