குவைத்தில் அரசு முறை பயணம் முடிந்து பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார்.
அவரை குவைத் பிரதமர் விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தார்.
அரசு முறை பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பட்டத்து இளவரசர் ஷபா அல் காலீத் அல் ஷபாவை சந்தித்து பேசினார். பின்னர் அந்நாட்டு முக்கிய பிரதிநிதிகளுடனும் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
அதைத்தொடர்ந்து, இந்தியா – குவைத் இடையே பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி மற்றும் குவைத் மன்னர் ஷேக் மெஷல் – அல் அகமது – அல் ஜபீர் – அல் ஷபா முன்னிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை பிரதிநிதி அப்துல்லா அலி அல் யாஹ்யா புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்நிலையில் குவைத்தில் அரசு முறை பயணம் முடிந்து பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார். அவரை குவைத் பிரதமர் விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தார்.