
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள. 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது ரூ. 15 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 2023 மார்ச் 27 ஆம் தேதி
பாலாளயம் செய்யப்பட்டு தற்போது
பணிகள் மும்முரமாக நடைபெற்று
வருகிறது. ஆதிகும்பேசுவரர் கோவில்
ராஜகோபுரத்தில் உள்ள 9 கலசங்களில்
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நேற்று
16 ஆண்டுகளுக்குப் பிறகு கலசங்கள்
கீழே இறக்கப்பட்டன. கலசங்களில்
பணிகள் நிறைவடைந்து குடமுழுக்குக்கான
யாகசாலையில் வைக்கப்பட்டு பின்னர்
ராஜகோபுரத்தில் பொருத்தப்படும் என
கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.