குடந்தை மடத்துதெரு பகவத் விநாயகருக்கு நவக்கிரஹ திருவாட்சி சாற்றுதல் விழா நடைபெற்றது

குடந்தை மடத்துதெரு பகவத் விநாயகருக்கு நவக்கிரஹ திருவாட்சி சாற்றுதல் விழா நடைபெற்றது

கும்பகோணம் மடத்துத் தெருவில் அருள்மிகு பகவத் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 200 ஆண்டுகள் பழமை நிறைந்த திருக்கோவிலாகும் கோவிலில் உள்ள பகவத் விநாயகருக்கு கும்பகோணம் விஜயேந்திர மடத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 2 லட்ச ரூபாய் மதிப்பில் வெள்ளியிலான நவக்கிரஹ வேலைப்பாட்டுடன் கூடிய திருவாச்சி செய்து கொடுத்திருந்தார், இதையடுத்து காவிரியாறு பகவத் படித்துறையில் மேளதாளங்களுடன் யானை மீது புனித நீர், நவக்கிரஹ திருவாட்சி ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது,

பின்னர் ஆலயத்தில் சென்னை ஆடிட்டர் சுந்தரராமன் தலைமையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு பகவத் விநாயகருக்கு மஞ்சள், பால், சந்தனம், உள்ளிட்ட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைதொடர்ந்து விநாயகருக்கு நவக்கிரஹ திருவாட்சி சாற்றப்பட்டு சுவாமி சன்னதியில் ராஜகோபுர தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னா் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது,

இந்நிகழ்ச்சியில் நாராயணி நிதி லிமிடெட் தலைவர் கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன், விஷ்ணு பாலாஜி, ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுந்தரராஜன், தக்கார் சிவசங்கரி, ஆலய அர்ச்சகர் சுரேஷ், சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *