
மலைக்கோட்டை பகுதியில் பொதுக் கழிவறையை அகற்றிவிட்டு
குறுகலான பாதையில்
கார் பார்க்கிங் அமைக்க மாநகராட்சி
நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் பொது மக்கள் அச்சம்.
திருச்சி மலைக்கோட்டை 13 வார்டுக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதி போக்குவரத்திற்கு மிகவும் இடையூறு உள்ள பகுதி வாகனங்கள் சென்றுவர இயலாத இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளது. மக்கள் குடியிருக்கும் இந்தப் பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பதற்கு இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்படி இடத்தில் பார்க்கிங் அமைத்தால் கடும் வகன நெரிசல் ஏற்படும் மற்றும் பொதுமக்கள் சென்று வர பெரும் இடையூராக இருக்கும் என்ற காரணத்தினாலும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாலும் மாற்றிடத்தில் கார் பார்க்கிங் அமைக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இந்த மனு மீது திருச்சி மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்மந்தமாக திருச்சி மாவட்ட
அ.ம.மு.க,கட்சி பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முன்னரே மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி..?