
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் லலிதா முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி பெருந்திருவிழா இன்று கொடி-ஏற்றத்துடன் துவங்கியது.
அதிகாலை 5 மணி அளவில் கோவில் கொடி மரத்தில் திருவிழாவின் அடையாளமாக கொடியேற்றப்பட்டது.
பால்குடம் எடுத்தல் அக்னிச்சட்டி எடுத்தல், தீ-மிதித்தல்,, ஆகியவற்றிற்கு பக்தர்கள் கையில் காப்பு கட்டி கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காரைக்குடி காவல்துறையினர் செய்துள்ளனர்.

அதிகாலை முதல் மிதமான மழை பெய்த நிலையில், முத்தாலம்மன் கோவிலில் இருந்து, செக்காலை வீதி காரைக்குடி வித்யா கிரி பள்ளி, வழியாக பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்றனர்.
திருவிழா துவங்கிய இன்றைய தினத்தில் இருந்தே பக்தர்கள் பால்குடம் எடுக்க துவங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

