
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்புமேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தகுதியான ஆட்சேபனை அற்ற நிலத்தில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார்
உடன் 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன்,கழிஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள், திமுக பிரமுகர் அஸ்மத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
– வேலூர் மாவட்ட செய்தியாளர் வி.விஜயகுமார்