
காட்பாடியில் கமாண்டோ படைகள் இருவகையான கமாண்டோ படைகள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களை மீட்பது தீவிரவாதிகளை எவ்வாறு உயிருடன் பிடிப்பது என ஒத்திகையை நடத்தி காட்டினார்கள்
வேலூர்மாவட்டம் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தமிழக கமாண்டோ படை மற்றும் தேசிய கமாண்டோ படையை சேர்ந்த 200 வீரர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று பேரை மீட்பது தீவிரவாதிகளை எவ்வாறு பிடிப்பது போன்ற ஒத்திகையை துப்பாக்கியுடன் நடத்தினார்கள்.
மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் எவ்வாறு அவர்களை உயிருடன் மீட்பது என கமாண்டோ படையினர் பதுங்கி பதுங்கி சென்று மீட்பதை தத்ரூபமாக செய்து காட்டினார்கள்.
இதில் திரளான அரசு அதிகாரிகள் வருவாய்த்துறையினர் தீயணைப்புத்துறையினர் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

