
காட்பாடியில் அரசு சட்ட கல்லூரி வேலூர் மற்றும் டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளி இணைந்து போக்ஸோ சட்டத்தினை குறித்த விழிப்புணர்வு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசு சட்ட கல்லூரி வேலூர் மற்றும் டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளி இணைந்து போக்ஸோ சட்டத்தினை குறித்த விழிப்புணர்வு நிகழ்வினை ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தினர்.
குழந்தைகளின் உரிமைகள் மற்றும் போக்ஸோ சட்டத்தை மையமாக கொண்டு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளும் நடைபெற்றன. பள்ளி முதல்வர் திரு. கிருபாகரன் முன்னிலையில், பேராசிரியர் முனைவர் கே.லதா, முதல்வர், அரசு சட்ட கல்லூரி, வேலூர் இந்நிகழ்வை தலைமை தாங்க, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.
இளைஞர் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலர் முனைவர் சா. ஹெப்சிபா பியூலா அவர்களின் ஒருங்கிணைப்பில் வேலூர் சட்ட கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலமாக இவ்விழிப்புணர்வை பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தினர்.