
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் திரியாலம் பகுதியில் தமிழக முதல்வரின் முகவரி துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் சத்யா சதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜ் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த பெண்களிடம் எம்எல்ஏ பேசுகையில். இந்த முகாம் கிராமப்புற மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் உரிமை தொகை வாங்காத பெண்கள் இந்த முகாமை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், பின்னர் கலைஞர் உரிமை தொகை பெற்று வாழ்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என பேசினார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் கவிதா தண்டபாணி, சதிஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயபாரதி, வீரப்பன் , துணை தலைவர் ராஜம்மாள் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.