
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் (கீழூர்) இந்து நாடார் சமுதாயத்தின் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.
இப் போராட்டம் காலை 6 – மணி முதல் டீக்கடை, மளிகை கடை, சலூன் கடை, பீடிக்கடை அடைப்பு கொத்தனார்கள், பீடி சுற்றும் பெண்கள் விவசாயிகள் வேலைக்கு
செல்லாமல் ஶ்ரீராம சாமி கோவில் திடலில் ஒன்றி கூடி போராட்டம் நடத்தி வந்தனார் .
இந்நிலையில் சம்பவமறிந்த வந்த மாவட்ட காவல்கண் காணிப்பாளர் அரவிந்த்,
தலைமையில், துணை காவல் கண் கணிப்பாளர் தமிழ் இனியன், உதவி காவல் ஆய்வாளர் சதீஸ் ஆகியோர் இந்து நாடார் சமுதாய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாரச தீர்வு ஏற்பட்டது.
அதனை யெடுத்து கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு
இயல்பு நிலை திரும்பியது.