
ஓ.என்.ஜி.சி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் இராமநாதபுரம் உள்ளிட்ட அதன் செயல் பாடுகள் உள்ள மாவட்டங்களில் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக சார்ந்து நிறைய திட்டங்களை சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் செய்து சமுதாயபணியாற்றி வருகிறது.
அதுமட்டமல்லாமல் ஓ.என்.ஜி.சி யில் உள்ள பணியாளர்கள் சார்ந்த சில அமைப்புகளும் கடமையாற்றி வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஓ.என்.ஜி.சி மகிளா சமிதி அமைப்பு மூலம் நாகை மாவட்டம் முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவ மாணவியர்கள் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மற்றும்
கணிணிகள் மகிளா அமைப்பின் தலைவி சந்தா உதய் பஸ்வான் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் செயலாளர் ஜெயந்தி கொளஞ்சி நாதன் மற்றும் மகிளா சமிதி உறுப்பினர்கள், முட்டம் தலைமை ஆசிரியர் சாந்தி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல் ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியில் ரூபாய் மூன்று இலட்சம் மதிப்பில் மாணவ மாணவியருக்கு இருக்கை வசதிக்காக பெஞ்ச் டெஸ்க் நாகை நகரம்
சி எஸ் ஐ உயர்நிலைப்பள்ளிக்கு
வழங்கப்பட்டது. இதனை மகிளா தலைவி சந்தா உதய் பஸ்வான் சி.எஸ்.ஐ தாளாளர் Dr.ஜான் ஆர்தர் மற்றும் தலைமை ஆசிரியர் ஜெசிந்தா விடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மகிளா செயலாளர் ஜெயந்தி மற்றும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஓ.என்.ஜி.சி குழும பொதுமேலாளர் பி.என்.மாறன் துணை
பொதுமேலாளர் அறிவழகன் ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தம், சம்பத் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு நிகழ்ச்சிகளிலும் அந்தப் பள்ளிகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் எழுதிய “என் வாழ்வில் திருக்குறள்” புத்தகம் தலா நூறு பிரதிகள் ஓஎன்ஜிசி சார்பில் வழங்கப் பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி.க்கு பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள்
பெற்றோர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.