
ஒன்றிய அரசு தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கக் கூடாது என சேலத்தில் நாகை திருவள்ளுவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் நான்கு ரோடு அருகே உள்ள நேஷனல் ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்துக்கு நிதியை வழங்குவேன் என்று கூறும் பாஜக அரசின் திமிர் தனத்தை தமிழ் புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரில் தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் அதிகப்படியாக மாற்றுவதை தடுக்கும் விதமாக இந்த தொகுதி சீரமைப்பு அமைந்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
திட்டமிட்டு தமிழ்நாட்டில் பிஜேபி கால் பதிக்க முடியாத நிலையில் எல்லா நிலைகளிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் இந்த பாசிச பாஜக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.
வருகின்ற 5ம் தேதி நடைபெறவுள்ள அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி பங்கேற்கிறது.
தமிழ்நாட்டில் உரிமைகள் பாதிக்கப்படும் பொழுது தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அதை பாதுகாக்க குரல் கொடுத்து வருகிறோம்.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
திமுக அரசு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணிக்கு தமிழ் புலிகள் கட்சியின் முழு ஆதரவை தெரிவிக்கிறோம். ஒன்றிய அரசு முன்மொழிக்கொள்கையை திணிக்க வேண்டும் என்ற முயற்சியோடு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். சாதியக் கொடுமைகள்
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்துவதும் எங்கள் இயக்கத்தின் செயல்படாக உள்ளது.
சாதியக் கொடுமைகளுக்கும் தீண்டாமை கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களுடைய போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்திலிருந்து நூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

