
மயிலாடுதுறை ஐடியல் பள்ளியில் சீனியர் கே.ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா பள்ளித் தலைவர் முகமது சித்திக் தலைமையில் நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் கலந்துகொண்டு, சீனியர் கே.ஜி படிப்பு முடித்த 24 மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார்.
இதில் பள்ளி தாளாளர் இம்ரான் பிரவீன், பள்ளி தலைமை ஆசிரியர் மரியாளினா ஜாஸ்மின், முகமது சித்திக் மாநில பொதுக்குழு உறுப்பினர் நவாஸ், சதீஷ்குமார், ராமகிருஷ்ணன், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

