
ஜோலார்பேட்டை:17
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை ஊராட்சியில் மங்களம் கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி ஆன்மிக சித்தர் பீட வார வழிபாட்டு மன்றத்தில் வளமான மழைவளம் வேண்டி 19 ஆம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் விழா ஆதிபராசக்தி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேட்டுக்கனியூர் மகளிர் குழு கும்மிபாட்டு ஓம் சக்தி நாடக குழுவினரின் தக்கன் யாகம், ஆதிபராசக்தி பிறப்பு எனும் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. மேலும் காலை கோபூஜை , அக்னி பூஜை மற்றும் ஏலகிரி மலை முருகன் ஆலயத்தில் இருந்து கரகம் , கஞ்சி கலயம் 108, பால் குடம், முளைப்பாரி, தீச்செட்டி ஆகியவை பம்பை, சிலம்பாட்டம், மானாட்டம், மயிலாட்டம் குதிரையாட்டம் அம்மன் தோர் ஊர்வலமாக ஓம் சக்தி நகர் வழிப்பட்டு மன்றம் வந்தடைதல் 17.08.2025 அன்று மாலை 4 மணியளவில் பூ மிதித்தல் பாலாபிஷேகம் அம்மன் தாலாட்டு அன்னதானம் சிறப்பு பூஜை புங்கானூர் கோபாலகிருஷ்ணன் – பாக்யா முன்னிலையில் நடைபெற்றது. உடன் ஆதிபராசக்தி மன்ற துணைத் தலைவர் பெருமாள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஏலகிரி மலை 14 கிராம ஊர் பொதுமக்கள் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

