செய்தி முன்னோட்டம்
மலேசிய தொலைத்தொடர்பு கிங் என அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணனின் ஒரே ஆண் வாரிசான வென் அஜான் சிரிபான்யோ, தனது தந்தையின் கோடிக்கணக்கான சொத்தை வேண்டாம் எனக்கூறி, 18 வயதில் துறவறத்தை மேற்கொள்ளவுள்ளார்.
AK என்றும் அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணன், மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவார். இவர் சொத்தின் நிகர மதிப்பு ₹ 40,000 கோடி (5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்) அதிகமாக உள்ளது என்று சவுத் சைனா போஸ்ட் தெரிவித்துள்ளது.
AK, ஆரம்பகாலத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிதியுதவி அளித்த ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
அரச வேர்கள்
சிரிபன்யோவின் அரச பரம்பரை மற்றும் ஆரம்பகால வாழ்க்கை
தாய்லாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த அவரது தாயார் மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன் மூலம் சிரிபான்யோ அரச பரம்பரை வாரிசும் ஆவார்.
சிரிபான்யோவின் குழந்தைப் பருவத்தைப் பற்றி அதிகம் வெளியில் அறியப்படவில்லை. லண்டனில் வளர்ந்ததாக அறியப்படும் சிரிபான்யோவிருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
இவர் தனது பள்ளி படிப்பை இங்கிலாந்தில் படித்தார் எனவும் தமிழ், தாய் உள்ளிட்ட எட்டு மொழிகளில் புலமை பெற்றவர் எனவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறியுள்ளது.
18 வயதில், சிரிபான்யோ தாய்லாந்திற்கு தனது தாய்வழி உறவினர்களைச் சந்திக்கச் சென்ற போது, ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டார் எனவும், அதில் ஏற்பட்டு அவர் பௌத்த மதத்தை தழுவ முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆன்மீக பாதை
தாவோ டம் மடாலயத்தில் சிரிபான்யோவின் துறவு பயணம்
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அவர் இப்போது ஒரு வனத் துறவி மற்றும் தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள Dtao Dum மடாலயத்தின் மடாதிபதி.
ஆனால் சிரிபான்யோ தனது செல்வத்தை எவ்வளவு விட்டுக்கொடுத்தார்?
ஒரு துறவியாக, சிரிபான்யோ ஒவ்வொரு நாளும் யாசகம் பெற்றே வாழ்கிறார் என்றும், அது தேவைப்படும்போது தந்தையின் சொத்தை பெறுவதைத் தடுக்காது என்றும் கூறப்படுகிறது.
பௌத்தத்தின் கட்டளைகளில் ஒன்று குடும்ப நேசம் என்பதால், அவர் அவ்வப்போது தனது தந்தையைப் பார்க்க நேரம் எடுத்துக்கொள்கிறார்.
அவரது பயணத்திற்காக பிரைவேட் ஜெட் ஒன்றையும் பயன்படுத்துகிறார் எனவும் கூறப்படுகிறது.