உ.பி.யில் கூகிள் மேப்-ஐ நம்பி சென்று 3 பேர் உயிரிழந்த துயரம்

உ.பி.யில் கூகிள் மேப்-ஐ நம்பி சென்று 3 பேர் உயிரிழந்த துயரம்
இந்த சோக சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது

செய்தி முன்னோட்டம்

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ்-ஐ நம்பி உடைந்த பாலத்தின் மீது காரை ஓட்டிச்சென்று, ஆற்றில் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்ததாக துயர சம்பவம் நடந்துள்ளது.

இந்த சோக சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது.

வாகன ஓட்டிகள் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்குச் சென்றனர்.

திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர். அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களை உடைந்த மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது.

அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்ததுள்ளது.

விபத்து நடந்த போது போதிய சூரிய வெளிச்சம் இல்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

சேதமடைந்த காரையும், இறந்து கிடந்த மூன்று பேரையும் உள்ளூர்வாசிகள் கண்டதாக ஆரம்பகட்ட விசாரணை கூறுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

GPS மேப்ஸ்-ஐ நம்பி தொடர்ந்து நடைபெறும் விபத்துகள்

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவத்திற்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை குற்றம் சாட்டினர்.

வெள்ளத்தால் உடைந்த பாலம் ஏன் முடிக்கப்படாமல் உள்ளது என்றும், பாலம் சேதமடைந்துள்ளது குறித்து எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை என்றும், உடைந்த இடத்தில் தடுப்புகள் எதுவும் ஏன் நிறுவப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

அலட்சியம் காட்டிய கட்டுமானத் துறை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவில் தொடர்ந்து கூகிள் மேப்ஸ் விபத்துகள் நடந்து வருகிறது. சமீபத்தில் கேரளாவில் GPS மேப்-ஐ நம்பி சென்று ஆற்றுக்குள் கார்-ஐ விட்ட வினோத சம்பவமும் நடந்துள்ளது.

source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *