உத்தரப் பிரதேசத்தின் குந்தர்கி தொகுதியில் 11 இஸ்லாமிய வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட இந்து வேட்பாளர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 6 இடங்களை பாஜக கைபற்றியுள்ளது. குறிப்பாக 30 ஆண்டுகளுக்கு பிறகு குந்தர்கி தொகுதியில் பாஜக வெற்றிப்பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியில் அனைத்து கட்சிகளும் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தியது. பாஜக மட்டும்தான் குந்தர்கி தொகுதியில் ராம்வீர் சிங் தாகூர் என்ற இந்து வேட்பாளரை களமிறக்கியது.
தேர்தல் முடிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 11 இஸ்லாமிய வேட்பாளர்களையும் வீழ்த்தி ராம்வீர் சிங் தாகூர் வெற்றிப்பெற்றுள்ளார். அதுவும் ஒரு லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிப்பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.