
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முனுசாமி தலைமை தாங்கினார். கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் சதானந்தம் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கந்திலி ஒன்றிய செயலாளர் (மே) முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டனர்.முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி நல திட்ட உதவிகளை வழங்கினார்பின்னர் இறுதியாக திருப்பத்தூர்வட்டாட்சியர் நவநீதம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி ஒன்றிய கவுன்சிலர் சாந்தகுமார் ஊராட்சி செயலாளர் ரமேஷ் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

