
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் அச்சமங்கலம் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இம்முகாமில் அச்சமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார் திருப்பத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி முன்னிலை வகித்தார் .இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக சோலையார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டனர். முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த முகாமில் இறுதியாக ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் முருகன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வருவாய் ஆய்வாளர் ஊராட்சி எழுத்தாளர் சரவணன்அனைத்து துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

