
ஈரோடு மாவட்டம் அகில இந்திய விஸ்வகர்ம பேரவை புஞ்சைபுளியம்பட்டி கிளையின் சார்பில் மற்றும் காதி மற்றும் கிராம தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மரக் கைவினைப் பொருட்கள் தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி பிப்ரவரி 6 முதல் நடைபெற்று வருகிறது.
இதில் 20 மர கைவினைக் கலைஞர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்து வருகிறார்கள் இதில் இந் நிறைவு நாளை ஓட்டி பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரி காதி மற்றும் கிராம தொழில் மேம்பாட்டு திட்டத்தின் மாநில தொழில் ஆணையத்தின் மாநில இயக்குனர் சுரேஷ் துணை இயக்குனர் வாசி ராஜன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் ராஜேஸ்வரி சர்வோதய சங்க செயலாளர் சரவணன் சக்தி சர்வோதய சங்க செயலாளர் முருகானந்தம் நல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் அகில இந்திய விஸ்வகர்ம பேரவை கிளையின் செயலாளர் ஆர்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரி அவர்கள் 20 பேருக்கும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார் இதில் அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நிர்வாகிகள் மற்றும் மர கைவினை கலைஞர்கள் கலந்து கொண்டனர்

