லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனம் மீது கடந்த 13 மாதங்களாகத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த செப்டம்பர் இறுதியிலிருந்து அண்டை நாடான லெபனானையும் தாக்கி வருகிறது.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்துத் தாக்குவதாகக் கூறும் இஸ்ரேல், தலைநகர் பெய்ரூட்டில் குடியிருப்பு கட்டடங்களையும் தகர்த்து வருகிறது. அந்தவகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.